தொல்லியல் நிறுவனம்
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் 1974 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் என்னும் முதுநிலைப் பட்டயம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தொல்லியல் மற்றும் நமது மரபு குறித்தான ஆர்வம் தமிழ்நாட்டில் புத்தாக்கம் பெற்றுள்ள நிலையில் இந்நிறுவனம் தொல்லியல் நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இரண்டாண்டு கால முதுநிலை பட்டய படிப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2020-2021-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ள இந்த முதுநிலை பட்டயப் படிப்பின் பாடத்திட்டங்கள் பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள பாடத்திட்டங்களுக்கு இணையாக வகுக்கப்பட்டுள்ளன. தலைசிறந்த தொல்லியல் வல்லுநர்களைக் கொண்டு செய்முறைப்பயிற்சியுடன் கற்பிக்கப்படவுள்ளது. இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தரமான கல்வியை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) பயிலுதவித் தொகையாக 2020-2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவுள்ளது.
இதுவரையில், 245 மாணவர்கள் இந்நிறுவனத்தில் இருந்து முதுகலைப் பட்டயம் பெற்றுள்ளனர்.
அடிப்படைத் தகுதிகள் - கல்வித் தகுதி: முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலைப் பொறியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 55% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
அடிப்படை மொழி -தமிழ் மற்றும் ஆங்கிலம்
பதிவு செய்யும் முறை - ஆண்டுதோறும், ஜூலை மாதம் இரண்டாம் வாரத்தில் இதற்கான விளம்பரம் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழிகளில் வெளியிடப்படும். ஜூலை மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பயிற்சிக் காலம் - ஈராண்டு காலம்
பயிற்றுவிக்கப்படும் பாடங்களின் விவரம் - தொல்லியல் ஓர் அறிமுகம் / தொல்லியல்: கோட்பாடுகளும், முறைமைகளும் / மாந்தர் படிநிலை வளர்ச்சியும் தொன்மைக் கால வரலாற்றுத் தொல்லியல் / தொடக்க வேளாண்மையும் வரலாற்றுதையகால தொல்லியலும் / இந்திய அரசியல் வரலாறு (பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரை) / வரலாற்றியலும் ஆய்வு நெறிமுறைகளும் / இந்திய கல்வெட்டியலும் தொல் எழுத்தியலும் / வட இந்தியக் கட்டடக்கலை / தென்னிந்தியக் கட்டடக்கலை / இந்திய நாணயவியலும், அருங்காட்சியகவியலும் / மரபு சார் மேலாண்மை மற்றும் பாதுகாத்தல் – இந்திய தொல்லியல் சட்டங்கள் / பண்டைய இந்திய சமூகமும்,பொருளாதாரமும் / இந்திய சிற்பக்கலை / தமிழக அரசியல் வரலாறு (பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரை) / கடல் சார் தொல்லியல் / தொல்லியலில் அறிவியலின் பயன்பாடு / பண்டைய அறிவியலும் தொழில்நுட்பமும் முதலான பாடங்கள் கற்பிக்கப்படும்.
பயிற்சி முடிவு - எழுத்துத் தேர்வு மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவரும் களப் பயிற்சிகள் முறையே தொல்லியல் கள ஆய்வுகளும் அகழாய்வுகளும் / கல்வெட்டியலும் மற்றும் நாணயவியலும் / தொல்லியல் பாதுகாப்பு / தொல்பொருட்களை ஆவணப்படுத்துதலும் காட்சிப்படுத்துதலும் / விழிப்புணர்வு தொல்லியல் / மின்னணுத் தொல்லியல் எனப் பல்வேறு தளங்களில் வழங்கப்படும். மேலும், இறுதியாக ஒரு விரிவான திட்டப் பணி ஒதுக்கப்பட்டு படிப்பின் முடிவில் சமர்ப்பித்தல் வேண்டும்.