பாறை ஓவியங்கள் - ஆலம்பாடி

வரலாற்றுச் செய்திகள்

திருக்கோயிலுhர் வட்டத்தில் கண்டாச்சிளூபுரம் என்ற ஊருக்கு அருகில் ஆலம்பாடி உள்ளது. இவ்வூரில் பெருங்கற்கால ஓவியங்கள் ஊருக்க மேற்கில் உள்ள சிறிய பாறையில் உள்ளன. இயற்கையான குடைவரையில் விலங்கிணங்களின் உரவங்கள் இங்கே வரையப்பட்டள்ளன.

தமிழ் நாட்டில் முதன்முதலில் இங்குதான் உள்ளுருப்புகளைக் காட்டும் எக்ஸ்ரே (ஓ-சுயல) வடிவ ஓவியங்கள் கண்டறியப்பட்டன. முயீகத் தொன்மையான பாறை ஓவியங்களில் இம்முறை இடம் பெறும். முhன் மற்றும் மாட்டின் உருவம் இவ்வாறு இங்கு வரையப்பட்டுள்ளன. இயதியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் எக்ஸ்ரே வடிவ ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள விலங்கின ஓவியங்கள் பொதுவாக அடர்த்தியான வண்ணப்பூச்சு முறையில் அமையவில்லை. இங்கு இரண்ட அடுக்கு வண்ணப் பூச்சு முறை காணப்படுகிறது.

தொன்மையான ஓவியங்களின் எஞ்சிய தடயங்களின் மீது மீண்டும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும். இங்கு செங்காவி (சுநன ழுஉhசந) மற்றும் வெளளூளை நிறங்களில்ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒரு மான் மரஞ்செடிகளுக்கிடையே மறையது நிற்பது போன்றும், புதர்களுக்கிடையே அது செல்வது போன்றும் இங்கு வரையப்பட்டுள்ளது. இத்தகு அமைப்பு பிற்காலத்தது எனலாம். மான் மட்டுமன்றி காளை, பன்றி, முயல் பொன்ற விலங்குகளும் இங்குள்ளன. இயத நினைவுச் சின்னத்தை தமிழக அரசு தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.

அமைவிடம் : சென்னையிலிருயது 160 கி.மீ தொலைவில் உள்ள வழுப்புரத்தில் இருயது --- கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : திருக்கோவிலூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 139/த.வ.ப.துறை/நாள்/10.05.89