உதயகிரிஸ்வரர் கோயில் - வரிச்சியூர்
வரலாற்றுச் செய்திகள்:
மலையின் கிழக்குச் சரிவில் ஓர் குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறை மட்டும் கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்கு சான்றாக விளங்குகிறது. ஊட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன் உதயகிரிஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
அமைவிடம் : சென்னையிலிருயது 444 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருயது 12 கி.மீ தொலைவில் உள்ளது.
வட்டம் : மதுரை (வடக்கு)
சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 1109/கல்வித் துறை/நாள்/17.06.78