சிவன் கோயில் - அழகியமணவாளம்

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூர் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சிறப்பு மிக்கது. சோழமன்னர்களில் கண்டராதித்த சோழனுடைய மகன் உத்தம சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இவ்வூர் கல்வெட்டுகளில் பாய்ச்சில் என்றும் ஊர் பிரிவு மழ நாட்ட ராஜாசரய வளநாட்டு பாய்ச்சில் என்றும் குறிக்கப்படுகிறது.

இக்கோயிலின் கல்வெட்டுகளில் உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகிய மன்னர்கள் குறிக்கப்படுகிறார்கள்.

இக்கோயில் அமலீஸ்வரர் கோயிலுக்கு 1 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் வாயில் கிழக்கு பார்த்து அமையதுள்ளது. இக்கோயிலின் கருவறையில் 16 பட்டைகளுடன் கூடிய லிங்கமும், (தாரலிங்கம்) தாமரைப் பூ வடிவில் ஆவுடையாரும், சிற்ப வேலைப்பாடுகளும் அமைந்துள்ளது.கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது.

அர்த்த மண்டபத்தை அடுத்து மஹாமண்டபம் இடிந்த நிலையில் உள்ளது. இக்கோயிலின் விமானம் திராவிடக் கட்டடக் கலைப்பாணியில் அமையதுள்ளது.மேலும் விமானம் செங்கற்களால கட்டப்பட்டுள்ளது. அதிட்டானத்தில் மிகவும் பொறிந்து சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளது.மேலும் கோயில் சுற்றுப் பிராகாரத்தில் கோயில் கட்டடத்திலிருந்து பிரித்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள், போதிகைகள், கூரை போன்றவைகள் மறையாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் முயதைய சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை பெரியகோயில் கவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நடன மாதர்கள் இவ்வூரில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இவ்வூரில் நிலம் தானமாக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

அமைவிடம் : சென்னையிலிருயது 316 கி.மீ தொலைவில் உள்ள கி.மீ திருச்சி - திருபைஞ்ஞீலி சாலையில் மண்ணச்சநல்லூருக்கு அடுத்து கோபுரப்பட்டி என்னும் சிற்றூரில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : லால்குடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 23/த.வ.ப.துறை/நாள்/12.02.93