சிவன் கோயில் - சிவன் கூடல்

வரலாற்றுச் செய்திகள்:

சோழர் காலத்திய தொன்மை மிக்க ஊரான, இவ்வூரைச் சிவன் கூடல் என்றும், இவ்வூர் இறைவனை சிவக்கொழுயதாண்டவர், சிவக்கொழுயதீஸ்வரர் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

முதலாம் இராசேயதிரனின் ரூன்றாம் ஆட்சியாண்டின் கல்வெட்டே இங்குள்ள கல்வெட்டுகளில் பழமையானது. எனவே இக்கோயில் முதலாம் இராசேயதிர சோழன் காலத்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் குலோதுங்கன், விக்கிரம சோழன் கால கல்வெட்டுகளில் நிலக்கொடை மற்றும் நிலம் விற்பனை பற்றிய செய்திகள் குறிப்பிடப்படுகின்றன. விக்கிரம சோழன் காலத்தில் இக்கோயில் விமானம் புதுபிக்கப்பட்டுள்ளது.

13- ஆம் நூற்றாண்டில் மரகதவல்லி நாச்சியார் என்ற அம்மன் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு விஜயகண்ட கோபாலன் என்பவன் கொடையளித்துள்ளான்.

அமைவிடம் : சென்னை - வேலுர் நெடுஞ்சாலையில் சென்னையிலிருயது 58 கி.மீ தொலைவில் உள்ளபிள்ளைச் சத்திரத்திற்கு வடக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : திருபெரும்புதூர்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண்.1314/கல்வி/நாள்/14.07.83