ஜெகதேவி கோட்டை - ஜெகதேவி பாளையம்

வரலாற்றுச் செய்திகள்

இவ்வூர் விஜய நகர மன்னர் ஜெகதேவராயர் பெயரில் வந்தது என்பர். ஜேகதேவராயர் பெனுகொண்டாவில் ஆட்சி புரிந்தவர் ஜெகதேவி, ஜெகதேவி துர்கம் என்று அழைக்கப்படும் இரண்டு மலைகள் இங்கு காணப்படுகின்றன. மேற்கே அமைந்தது கெவலவாடி அடுத்து கிழக்கே அமைந்தது ஜெகதேவி துர்கம் ஆகும். இந்த மலையின் மீது சுற்றுச் சுவர்கள் காணப்படுகின்றன.

இந்த ஜெகதேவி, பாராமஹால்’ என்று அழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் ஒன்று. ஜெகதேவராயர் ஹைதராபாத்தில் இருந்து பெனுகொண்டாவிற்கு வந்து சேர்ந்தார். ரங்கராயர் - II இவரின் ஆட்சி காலத்தில் ஜெகதேவராயர் சந்திரகிரியின் பகுதிக்கு தலைமை ஏற்றுச் சென்றவர்.

 அந்த பகுதியே தற்பொழுது பாராமஹால் என்று அழைக்கப்படும் பகுதி ஆகும். பின்னர் ரங்கராயர் -II   தன் மகளை இவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

ரங்கராயர் 64 குடும்பங்களுடன் ஜெகதேவியில் ஜெகதேவராயரை குடி அமர்த்தினார். 1589 - ல் ஜெகதேவராயர் -II  பெனுகொண்டாவை கோல்கொண்டா படைகளிடமிருந்து பாதுகாத்தார். அதற்கு சன்மானமாக சென்னப்பட்டணம் ஜாகீரைப் பெற்றார். பின்னர் தன் தலைநகரை ஜெகதேவியில் இருந்து சென்னப்பட்டணத்திற்கு மாற்றினார். பாராமஹாலுக்கு உட்பட்ட பகுதியை  ஜெகதேவராயர், ஜெகதேவராயாயரின் கொள்ளு பேரன் சில காலம் பாதுகாத்து வந்தார்.

பின்னர் சாமராஜா மைசூரை ஆடசி புரிந்து கொண்டு இருந்த சமயம் படைதிரட்டி சென்னப்பட்டணத்தைக் கைப்பற்றினார். ஜெகதேவராயர் வம்சத்தினர் மீண்டும் தங்களது பழைய தலைமை இடமான ராயக்கோட்டைக்கே ஜெகதேவி வழியாக சென்று சேர்ந்தனர். இந்த வரலாற்றின் எச்சங்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

அமைவிடம் : சென்னையிலிருயது 262 கி.மீ தொலைவில் உள்ள கிருட்டிணகிரியில் இருயது 15 கி.மீ - (ம) - பர்கூரில் இருயது 8 கி.மீ தொலைவிலும் உள்ளது.

வட்டம் : கிருட்டிணகிரி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்:அ.ஆ.எண். 275/த.வ.ப.துறை/நாள்/14.11.97