மாளிகைமேடு - உள்கோட்டை

வரலாற்றுச் செய்திகள்:

சோழபேரரசன் இராஜராஜ சோழனின் மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் கங்கை வரைச் சென்று வெற்றிவாகை  சூடியது   நினைவாக கங்கைகொண்டசோழபுரம் என்ற தலைநகரையும்,கங்கைகொண்டசோழீஸ்வரம் என்ற கோயிலையும், சோழகங்கம் என்ற ஏரியையும் இங்கு ஏற்படுத்தினான்..

முதலாம் இராஜேந்திர சோழன் கங்கைகொண்டசோழபுரத்தை தலைநகராக ஆட்சி செய்த பொழுது ஒரு பெரிய அரண்மனையை உருவாக்கினான். இந்த அரண்மனை காலப்போக்கில் அழிந்து இன்று மண்மேடாகி, மாளிகைமேடு என்று அழைக்கப்படுகிறது.

அகழாய்வின் போது வெளிக்கொணரப்பட்ட அரண்மனையின் அடிப்பகுதிகளை பாதுகாப்பதோடு இதில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் கொண்டு ஒரு அகழ்வைப்பகம் உருவாக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அகழாய்வின் போது அரண்மனை செங்கற்கலால் கட்டப்பட்டிருந்தாலும் பெரிய அளவுகளை உடைய செங்கற்த் தூண்டுகளும் அரண்மனை முப்பரிகை இருந்ததற்கு ஆதரமாக இரும்பு ஆணிகளும் இரும்புப்பட்டைகளும் கிடைத்துள்ளன. மேலும், அரண்மனை சுதை வேலைப்பாடுகளுடன், வண்ண ஓவியங்கள் தீட்டபட்டதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது. மேலும், சோழர் காலத்தில் தமிழர்கள் சீனர்களுடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கு சான்றாக சீன பீங்கான் பொருட்கள் அகழாய்வில் கிடைக்கப் பெற்றுள்ளன.

மேலும் அகலாய்வின் போது அரண்மனை செங்கல்லால் கட்டப்பட்டிருயதாலும் பெரிய அளவுகளை உடைய செங்கற்த் தூண்களும் அரண்மனைமாடி இருயததற்கான இரும்பு ஆணணிகளும் இரும்புப்பட்டைகளும் கிடைத்துள்ளன.மேலும் அரண்மனை சுதை வேலைப்பாடுகளும், வண்ண ஓவியங்கள் தீட்டபட்டதற்கான சர்றுகளும் கிடைத்துள்ளது.மேலும் சோழர் காலத்தில் தமிழர்கள் சீனர்களுடன் வணிக தொடர்பு கொண்டிருயதர் என்பதற்கு சான்றாக சீன பீங்கானகளும் அகழாய்வில் கிடைக்கப் பெற்றுள்ளன.

அமைவிடம் :சென்னையிலிருந்து 342 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உடையார்பாளையம் வட்டத்தில்  உள்ளது,

வட்டம் : லால்குடி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 269/த.வ.ப.துறை/நாள்/20.12.94