வெட்டுவான் கோயில் - கழுகுமலை

வரலாற்றுச் செய்திகள்

வெட்டுவான் கோயில் தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டி வட்டத்தில் கழுகுமலை என்ற ஊரில் உள்ளது. கழுகுமலை ஊரிலிருந்து வடக்காக செல்லும் சாலையில் 1 கல தொலைவில் அமைந்துள்ள அரைமலையில் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமண தீர்த்தங்கரர்கள் உருவங்களும்உள்ளன.

‘அருக சமயக்கோட்டை அழித்த வெண்கனல்’ என்று வள்ளலாரால் புகழ்ப்பெற்ற ‘நின்றசீர் நெடுமாறன்’ காலத்தில் சமணர்களை இவ்வூரில் கழுவேற்றிய காரணத்தினால் இவ்வூர் கழுமலை என்று பெயர் பெற்றுப் பின்னர் கழுகுமலை என்று மாறிற்று என்பர்.

கழுகுமலையிலுள்ள வெட்டுவான கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப் போன்றது. இது ஒரே கல்லில் (ஆழழெடiவாiஉ) செதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாறையில் 25 அடி ஆழம்

சதுரமாகத் தோண்டி அதன் (47”ஓ24”) நடுப்பகுதியைக் கோயிலாகச் செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னரால் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக் கற்கோயிலாகும். இதன் வேலை முற்றுப் பெநவில்லை. வுயீமானத்தின் வேலை மட்டும் முடிவுற்றுள்ளது. இதில் கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. இதை தோற்றுவித்தவன் பாண்டியன் மாறஞசடையன். இதன் காலம் கி.பி 8-ஆம் நூற்றாண்டு. இது மாமல்லபுரத்தின் ஐந்து ரதங்களின் வகையைச் சார்ந்தது. இதில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன. வெட்டுவான் கோயிலிலுள்ள உமாமகேஸவரர், தடசிணாரூர்த்தி, தீருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் புகழ் பெற்றவை. இதில் மத்தளம் கொட்டும் தட்சிணாரூர்த்தி ஓர் அரிய சிற்பப்படைப்பாகம். வுயீமானதட்தைத் தாங்கும் பூதகணங்களும் மாறுபட்ட சிற்ப நுணுக்கம் வாய்ந்தவை.

வுயீமானத்தின் மேற்குத் திசையில் நரசிம்மரும், வடக்கில் அயனும் காட்சி தருகின்றனர். வுயீமானத்தின் நான்கு ரூலைகளிலும் நந்தி சிலைகள் இடம் பெற்றுள்ளன.இவற்றிற்குக் கீழ் யாழி வரிசையும், கபோதகமும் அமைந்துள்ளன. கொடுங்கையும், கந்தவர்களின் தலையுடன் கூடிய கூடுகளும் அழகு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கலையழகு வாய்ந்த சிற்பங்களைக் கொண்டு விளங்குவதால் இவற்றைத் தென்னகத்தின் எல்லோரா என்று அழைப்பர்.

சமணச்சிற்பங்கள்

சமணர்களின் முக்கியப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்தில் உள்ள மலையின் சரிவில் சமணத்தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோர்களின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிலைகளின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ‘எனாதி’ ‘காவிதி’ போன்ற சிறப்புப் பெயர் பெற்றவர்களும் இங்கு சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.

அமைவிடம் : சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், மதுரையிலிருந்து 125 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.

வட்டம் : கோவில்பட்டி

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள் : அ.ஆ.எண். 7/த.வ.ப.துறை/நாள்/06.01.90