சிவன் கோயில் - உலகாபுரம்

வரலாற்றுச் செய்திகள்:

இராஜராஜன் பட்டத்தரசி உலோகமாதேவி பெயரில் ஏற்பட்ட ஊர் என்பதால் உலோகமாதேவிபுரம் என்று வழங்கப்பட்டு இப்போது உலகாபரம் என மருவி வழங்கப்படுகிறது. சிவன் கொயில் கைலாசமுடையார் கோயில் என்றும் அரிகுல ஈஸ்வரமுடையார் கோயில் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டள்ளது.

முதலாம் இராஜராஜனுடைய ரூன்றாவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு அம்பலவன் கண்டராதித்தன் என்பவன் கோயில் கட்டியதைக் கூறுவதுடன், கோயில் விளக்கெரிக்க ஆடுகள் வழங்கியதையும் கூறுகிறது.

பிற்காலச் சோழர் காலத்தில் இவ்வூர் ஓய்மா நாட்டின் ஒரு பிரிவான பேரையு+ர் நாட்டில் அடங்கி இருயததாக கல்வெட்டகளில் காண்கிறோம்.இவ்வூரைச் சேர்யத நகரத்தார் இராஜேயதிர சோழ விடங்கர் ஏற்படுத்த நிலக்கொடை வழங்கியதை ஒரு கல்வெட்டு கூறுகிறது. .

ஓய்மா நாட்டுத் தனியூரான உலோகமஹாதேவிபரம் ஸ்ரீ கைலாயத்து பரமசுவாமிகள் என இறைவன் வழங்கப்பட்டள்ளார். திருக்கற்றளி எடுப்பித்த உடையார் பெருயதரத்து அம்பலவன் கண்டராதித்தன் என்று கல்வெட்ளூடு கூறுகிறது உண்ணாழி, இடைநாழி, மஹாமண்டபம் ஆகிய பகுதிகளுடன் அஷ.ட பரிவார சன்னிதிகள் முன்பிருயதன. . கருவறை சதுரமானது. 5.60 மீ பரப்பளவு. சில கோஷ்ட தேவதைகள் மட்டும் உள்ளன. கோயிலில் சில பகுதிகள் சிதையதுள்ளன. கோயிலிலுள்ள பிட்சாடனர், சு+ரியன் போன்ற அழகான சிற்பங்கள் சோழர்களின் சிற்ப கலைக்கு சான்று பகர்பவை.

அமைவிடம் : சென்னையிலிருயது 120 கி.மீ தொலைவில் உள்ள திண்டிவனத்தில் இருயது உப்புவேலூர் செல்லும் சாலையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : திண்டிவனம்

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 81/த.வ.ப.துறை/நாள்/23.03.87