சப்தமாதர் சிற்பங்கள் - பெருங்காஞ்சி

வரலாற்றுச் செய்திகள்

பெருங்காஞ்சி என்ற பெயர் தமிழ் இலக்கிய மரபில் புறத்துறை என்று பொருள்படும் கடரூர் கோட்டத்தில் சோழர்குல சுந்தரி சதுர்வேதி மங்கலம் என்ற பெயரில் இவ்வூர் இருந்துள்ளது. இவ்வூரில் பிற்காலப் பல்லவர்கால ஷப்தமாதர் சிற்பங்கள் உள்ளன. பிராமி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி, வாராகி, சாமுண்டி ஆகிய சப்தமாதர் சிற்பங்களுடன்ளூ விநாயகர், வீரபத்ரர் சூலதேவர் மற்றும் சூரியன் ஆகியோர் சிற்பங்கள் உள்ளன. சப்தமாதர் சிலைகள் யாவும் தனித்தனியாக னீடத்தில் அமர்ந்தபடி இடதுக்காலைத் தொங்கவிட்டு வலது காலை மடித்து சுகாசன நிலையில் உளூளன.

இந்திராணியைத் தவிர ஏயீனய மகளிர் அணைவரும் மார்பில் கச்சையுடனும், நான்கு கைகளுடனும் உள்ளனர். பின்புறக் கைகளில் அவர்களுக்குரிய ஆயுதங்களுடன் உள்ளனர் முன்புறக் கைகள் அபய முத்திரையிலும், தொடையிலும் அமைந்துள்ளன.

பிராமி, பின்புறக் கைகளில் அட்சமாலையும், கமண்டலமும் பற்றியுள்ளாள். மாகேஸ்வரி அட்சமாலையும், பாம்பினையும் பிடித்துள்ளாள். இருவரும் தலையில் ஜடாமகுடம் அணிந்துள்ளனர். வைஷ்ணவி கிரிடமகுடமணிந்து பின்கரங்களில் பிரயோக சக்கரமும், சங்கும் பற்றியுள்ளாள். கேளமாரி கமண்டலத்துடன் அக்கமாலை டிகாண்டுள்ளாள். இந்திராணி இருகரங்களில் ஒன்று அபய முத்திரையிலும், மற்றொன்று முழங்கால் மீதும் அமைந்துள்ளது. வாராகி பின்கரங்களில் சங்கு, சக்கரம. ஏங்திப ன்றி முகத்துடன் காட்டப்பட்டுள்ளாள். சாமுண்டி விரிசடையுடன், மார்பில் மண்டையோட்டை மாலையாக அணிந்து முகத்தில் கோரைப்பற்களுடன் அச்சம் தரும் வகையில் காட்டப்பட்டுள்ளாள். அவளது கைகளில் கபால கிண்ணமும், திரிசூலமும் உள்ளன.

இக்கழுவைத் தவிர இரு கரங்களிலும் தாமரை மலரை ஏந்திய நிலையில் அழகிய சூரியன் சிற்பமும் உள்ளது. இவை 1969-ல் கண்டறியப்பட்டடது. இவை கி.பி.9-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இந்த பல்லவர் காலச் விற்ப குழுவில் வலம்புரி விநாயகர் சிற்பம் குறிப்பிடத்தக்கது. இது தலையில் கணைளூட மகுடம் அணிந்து மேலிரு கைகளில் பாசமும், அங்குசமும் பற்றிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. வலது முன் கை மோதகத்துடன் இருக்க, இடது முன்கை தொடை மீது அமைந்துள்ளது. இக்குழுவிலுள்ள வீரபத்ரர் நான்கு கரங்களுடன் வித்தியாசமான ஜடாமுடியுடன் காட்சி தருகிறார்/ அவரது பின் கைகளில் மழுவும். திரிசூலமும் உள்ளன/

அமைவிடம் : சென்னையிலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள வாலாஜா பேட்டையிலிருந்து சோழிங்கர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது.

வட்டம் : வாலாஜா

சின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 2837/கல்வி/நாள்/31.12.81